Latest posts
-
இலங்கை சீரற்ற காலநிலை: 300ஐ கடந்தன உயிரிழப்புகள்!

இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் 88 பேரும், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியாவில் 68 பேரும், குருணாகலையில் 37, கேகாலையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாடு முழுவதிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சிக்கி, இதுவரை 370பேர் காணமற்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக…
-
வடக்கு கிழக்கில் பேரெழுச்சி – உலகம் முழுவதும் நினைவுகூரப்படும் மாவீரர்கள்!

தமிழின விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் கார்த்திகை-27 மாவீரர் நாள் இன்று. இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களை நினைவுகூரத் தயாராகியுள்ளார்கள். யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களுக்குப் பின்னர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பல பகுதிகளில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, நகர மற்றும் கிராமப்புறச் சந்திகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள…
-
“தமிழர் நிமிர்ந்த நாள்“ – தமிழினத் தலைவரைக் கொண்டாடிய மக்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று. இந்நிலையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்கள். குறிப்பாக, வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் குறிப்பிட்டளவு மக்கள் திரள் காணப்பட்டது. அதேபோல், நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, பொங்கல் பொங்கி, இனிப்புகள்…
-
நடுவன் – மக்களின் ஒற்றன்

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழர் இறை வணக்கத்துடன் மறவர்களின் அடியொற்றி, நடுவன் செய்தி ஊடகம் தனது ஊடகப் பயணத்தை நவம்பர் 26, 2025இல் தொடங்கியுள்ளது. செய்திகளின் நடுநிலையாளனாக, மக்களின் ஒற்றனாக ஊடகப் பயணத்தைத் தொடங்கியுள்ளான் நடுவன். உங்கள் ஆதரவைத் தந்து நடுவனின் நடுநிலைக்கு உரமிடுங்கள்! தமிழால் இணைவோம்!