தமிழின விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் கார்த்திகை-27 மாவீரர் நாள் இன்று.
இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களை நினைவுகூரத் தயாராகியுள்ளார்கள்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களுக்குப் பின்னர், வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பல பகுதிகளில் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, நகர மற்றும் கிராமப்புறச் சந்திகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூரத் தயாராகியுள்ளன.
இதேவேளை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் மாவீரர்நாள் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

