தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் இன்று.
இந்நிலையில், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்கள்.

குறிப்பாக, வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் குறிப்பிட்டளவு மக்கள் திரள் காணப்பட்டது.


அதேபோல், நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, பொங்கல் பொங்கி, இனிப்புகள் வழங்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி தமது உரையை ஆற்றியிருந்தமை குறிப்பிடக்கூடியது.
